Pages

Saturday, 21 July 2012

அறிமுகம் ஆகிறது - பத்திர பதிவிற்கு வருமான வரி செலான்!!

நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து பத்திர பதிவிற்கு வருமான வரி செலானை சமர்பிக்க வேண்டும்.
வீடு அல்லது நிலம் வாங்குபவர்கள் பத்திரத்தை பதிவு செய்யும் பொது வருமான வரியை ஏற்கனவே பிடித்தம் செய்ததற்கான செலானை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.
என்ற புதிய சட்டத்தை அமலாக்குவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இது இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

பெரிய நகரங்கள்:
ஒருவர் வீடு அல்லது நிலம் ஆகிய சொத்தின் மதிப்பு பெரிய நகரங்களை பொறுத்தமட்டில் ரூ.50 லட்சம் மற்றும் இதர நகரங்களில் ரூ.20 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால், அதனை வாங்குபவர்கள் சொத்தின் மதிப்பில் 1 சதவீதத்தை விற்பனை செயபவர்களிடமிருந்து அப்போதே பிடித்தம் செய்ய வேண்டும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரி துறைக்கு செலுத்த வேண்டும். இதனை நடைமுறைப் படுத்தும் வகையில் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கான ரசீதை சமர்பித்தால் மட்டுமே பத்திர பதிவு செய்யபடும் என்பதை சட்டமாக அரசு முடிவு செய்துள்ளது. முத்திரைக் கட்டணம் செலுத்துவதற்காக சொத்தின் மதிப்பு எவ்வாறு கணகிடப்படுகிறதோ அதன் அடிப்படையில் இந்த பதிப்பு கணக்கிடப்படும்.
சொத்தை விற்பனை செய்பவர்கள், அவர்களுக்கு தகுதி இருக்கும் பட்சத்தில் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரி துறையிடமிருந்து திரும்ப பெற்று கொள்ளலாம். இதற்கான தனி விண்ணப்ப படிவம்  வருமான வரி துறையால் விரைவில் தயாரிக்கபட உள்ளது.

கருப்பு பணம்:
வீடு மற்றும் நிலம் விற்பனையில் அதிக அளவில் பணம் புழங்குகிறது. மேற்கண்ட நடவடிக்கையில் வருமான வரித்துறை இந்த பரிவர்த்தனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என மதிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருப்பு பண புழக்கத்தை கட்டு படுத்தும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. நிலம் மற்றும் வீடுகள் விற்பனையில் ரொக்க பரிவர்த்தனையின் அளவு 60 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. இந்த சட்டம் நடைமுறையில் சாத்தியபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  
நன்றி: கொடிசியா
நன்றியுடன்
                                                                                                                             - P.ராஜா 

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....

9 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  2. எப்படியோ கருப்பு பணம் ஒழிந்தால் சரி !
    தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே !

    ReplyDelete
  3. கொஞ்சம் என்ன நிறையவே போடுகிறோம் உரத்தை உரத்த குரலில்.

    அருமையான பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ராஜா.

    ReplyDelete
  4. அவசிய தகவல் உழவரே ...
    நன்றிகள்

    ReplyDelete
  5. புதிய தகவல்
    உடன் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. இன்றுதான் ஒரு மறுமொழி மூலமாக உங்கள் தளத்துக்கு வந்தேன் . வாசிக்க ஆரம்பிக்கிறேன்.எனது தளத்தில் பின்தொடர வேண்டுமென வேண்டுகிறேன்.
    http://varikudhirai.blogspot.com/2012/08/blogger-follower-widget-disappeared.html

    ReplyDelete
  7. தகவலுக்கு ரொம்ப நன்றி தம்பி...!

    ReplyDelete
  8. தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே !

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி உழவரே ..

    ReplyDelete

வந்தது வந்தீடிங்க அப்படியே நான் உழுத இந்த நிலத்திற்கு கொஞ்சம் உரமிட்டுட்டு போங்களேன்...