Pages

Thursday, 14 February 2019

மண்டிகளின் விவரம் (MARKET PROFILE-AGMARKNET ), TOP 10 பொருட்களின் விவரம் (NAME OF COMMODITY)-eNAM

இ-ராஷ்ட்ரிய கிஸான் அக்ரி மண்டி e-RASHTRIYA KISAN AGRI MANDI (e-RAKAM, தேசிய வேளாண் சந்தை (eNAM) NATIONAL AGRICULTURE MARKET PORTAL பற்றியும் முந்தய பதிவில் விரிவாக தெரிந்து கொண்டோம். இதில் விவசாயிகள் தங்களுடைய பெயரைப் பதிவு செய்துகொண்டு தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்யலாம். இதைப்போலவே, வேளாண் பொருள்களை வாங்குபவர்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு தேவையான வேளாண் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். 


அடுத்து, நமது மாவட்டங்களில் உள்ள மண்டிகள் (MARKET PROFILE) அதில் விற்பனை செய்யும் வியாபார பொருட்களின் விவரம் (NAME OF COMMODITY) மற்றும் குளிர்சாதன பெட்டக வசதி (COLD STORAGE) எங்கு உள்ளது என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்! 

முதலில், AGMARKNET மண்டிகளின் விவரம் பற்றி பார்போம். இதில் கீழே உள்ள படத்தில் இருப்பது போல TAMILNADU என்பதை கிளிக் செய்து ,உங்களது மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். 
அடுத்து ஓபன் ஆகும் படத்தில் உங்கள் MARKET முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.


முக்கியமான விவரங்கள் (IMPORTANT POINTS):
- TOP 10 பொருட்களின் விவரம் (NAME OF COMMODITY), 
மொத்த பரப்பளவு (MARKET AREA)
வசதிகள் மற்றும் சேவைகள் (FACILITIES AND SERVICES)
போக்குவரத்து முறை (TRANSPORTATION FACILITY)
முகவரி, தொலைபேசி எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம். 

இதில் மொத்தம் 136 முகவரிகள் உள்ளன.

(eNAM) National Agriculture Market-ல் இதுவரை தமிழ்நாட்டில் 201 இடங்களை  உள்ளடக்கியுள்ளது. விவரங்களை தெரிந்துகொள்ள eNAM TOTAL MARKET COVERED இதை கிளிக் செய்து உங்களது ஏரியாக்களை தெரிந்து கொள்ளவும்.

டிஸ்கி😃: கிராமப்புற விவசாயி எளிதாக இ-ராஷ்ட்ரிய கிஸான் அக்ரி மண்டி இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும், (TAN) டான், (GST) ஜிஎஸ்டி போன்ற பதிவு எண்களைப் பெற்றிருந்தால் மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வந்தது வந்தீடிங்க அப்படியே நான் உழுத இந்த நிலத்திற்கு கொஞ்சம் உரமிட்டுட்டு போங்களேன்...