Pages

Saturday, 27 March 2021

TN Election 2021 உங்கள் தொகுதி வேட்பாளர்களின் விபரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிற நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். தங்களுடைய தொகுதியில் எந்தெந்த கட்சி எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன? என்றும் சுயேட்சை  வேட்பாளர் யார்? அவர்களைப் பற்றிய முழு தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டுமா?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் அதனை பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது இன்று அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர்களின் தகவல்கள் பற்றிய இணையதளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.

uzhavan.com

இந்த இணையதளப் பக்கத்தில், நடைபெறும் தேர்தல், உங்கள் மாநிலம் மற்றும் தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து 'Filter' என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.


அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் மற்றும் சுயேட்சை யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விபரம் இருக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேட்பாளரை view more என்பதை கிளிக் செய்தால், அவர்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு  Affidavit Download செய்து கொள்ளலாம். அதில் வேட்பாளர்களின் மொத்த சொத்து விபரங்கள், வேட்பாளரது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள், வேட்பாளர் மேல் உள்ள குற்ற வழக்குகள் விவரம் என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.


டிஸ்கி😃: உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொண்டு சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள்.

No comments:

Post a Comment

வந்தது வந்தீடிங்க அப்படியே நான் உழுத இந்த நிலத்திற்கு கொஞ்சம் உரமிட்டுட்டு போங்களேன்...