உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது

Monday 16 April 2012

தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.
பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை இந்த திட்டத்தை பயன்படுத்தி வாழலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டம் எந்தெந்த மருத்துவமனைகளில் செயல்படுகிறது என்பதையும் அந்த மருத்துவமனைகளில் எந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கிறது என்பதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது பற்றிய விபரங்கள் பாமர மக்களிடம் சரிவர சென்றடைய வில்லை. அதனை பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்போம் .....

மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து அந்த இணையத்தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல செய்தால் கிழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்...

அதில் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இடத்தில் உங்களது மாவட்டத்தின் பெயர்களை கொடுத்தால் உங்களது மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் பெயர்களை காட்டும்..

பின்பு நான் வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பது போல் அந்த இடத்தில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் அந்த மருத்துவமனையின் முகவரியும், அந்த மருத்துவ மனையில் குணபடுத்தபடும் நோய்கள பற்றியும் இருக்கும்.அதேபோல் ஒவ்வொரு மருத்துவமனையும் மேலே கிளிக் செய்தால் அதே போல் தோன்றும்.. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் உள்ள மக்கள் இதனை தெரிந்து கொண்டு பயனடையலாம்...

டிஸ்கி: எனது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் கேட்டதால் இந்த பதிவை எழுதினேன்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தெரியாதவர்களுக்கு தெரியபடுத்தவும்..

மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

6 உரமிடுபவர்கள்:

arasan said...

வணக்கம் ராசா ...
நல்ல பதிவு...
பல நண்பர்களுக்கு உதவி கரமாக இருக்கும் ..
இது போல் பல பதிவுகளை தொடர்ந்து வழங்கிட கேட்டுக்கொள்கிறேன் ..
நன்றி ..

Admin said...

அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு!

மாணவன் said...

பயனுள்ள தகவலை பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ராசா...

MARI The Great said...

அனைவரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு.., பகிர்வுக்கு நன்றி தம்பி..!

Anonymous said...

அனைவரும் அறிய வேண்டிய தகவல் நன்றி நண்பா

Anonymous said...

இத்திட்டத்தின் கீழ் நோயாளி அவருடைய சொந்த மாவட்டத்தில் மட்டும் தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமா அல்லது தமிழ் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாமா?

  © www.uzhavan.com 2013

Back to TOP