உங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி?
Saturday, 8 September 2012
தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர், நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலே இருக்கிறது.
அதாவது நீங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பணியில் இருக்கலாம். நமக்கு சொந்தமான வீடு, நிலம், தோட்டம் ஆகியவை உங்கள் சொந்த ஊரில் இருக்கும். நீங்கள் வரும் சமயத்தில் தான் அதை நேரில் சென்று பார்க்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அந்த இடத்திற்கு நீங்கள் தான் அதிகாரபூர்வமான உரிமையாளர் என பார்ப்பது பற்றிய தகவலை தான் இன்று பார்க்க இருக்கிறோம். அதற்க்கு முதலில் நாம் செய்ய வேண்டியது உங்களது நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம், முதலிய விவரங்களை குறித்து கொண்டு அடுத்ததாக உங்கள் வசம் இருக்கும் உங்களது நிலத்தின் பத்திரத்தில் உள்ள பட்டா எண், சர்வே எண், சர்வே உட்புல எண் அனைத்தையும் குறித்து கொள்ளுங்கள்.
தற்போது நில உரிமை நகல் பார்வையிட இந்த சுட்டியை கிளிக் செய்து அந்த இணையத்தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல செய்தால் கீழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்...
பின்னர் உங்களிடம் உள்ள தகவல்களை அதற்குரிய காலங்களில் சரியாக பதிவிட்டு சமர்பித்தால் கீழே இருப்பது போல் விண்டோ ஓபன் ஆகும்.
அவ்வளவுதான். அதில் உங்களது நில உரிமையின் பட்டா சிட்டா விவரங்கள், உங்களது நிலத்தின் உரிமையாளர் பெயர் உறவுமுறை ஆகியவையும் உங்கள் நிலத்தின் பரப்பும் எவ்வளவு என்பதும் வரும் அவ்வபோதே சரியாக உள்ளதா என்பதை நீங்கள் பார்த்து கொள்ளலாம்..
நன்றியுடன்
- P.இராஜா
டிஸ்கி : இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....அப்படியே உங்களது ஓட்டுகளையும் பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே..
24 உரமிடுபவர்கள்:
சென்னை இன்னும் தயார் ஆக வில்லையா
தகவலுக்கு நன்றி நண்பா ... தொடரட்டும் உங்கள் பணி
நண்பரே இரண்டாவதாக ஓபன் ஆகும் விண்டோவில் குறிப்பு இருக்கும் அதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..நண்பரே..
அனைவருக்கும் பயன்படும்
அவசியத் தகவலை பதிவு செய்து தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
tha.ma 3
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.
ஆஹா சிறப்பு
எல்லாருக்கும் பயனுள்ள பதிவு தம்பி தொடருங்கள்
மிகவும் பயனுள்ள தகவல்! நன்றி!
இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html
பயனுள்ள விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
தகவலுக்கு நன்றி தம்பி!
நிச்சயமாய் இது ஒரு பயனுள்ள பதிவு மிக்க நன்றி இராஜா.
அனைவருக்கும் பயன் படும் பகிர்வு... மிக்க நன்றி நண்பரே...
டெம்ப்ளேட் கமெண்ட் போல தெரிஞ்சாலும் பதிவு அருமை சகோ. எல்லாரும்தான் நிலம் வாங்குறோம். எல்லார்கிட்டயும் நைலம் இருக்கு. ஆனா, அதை பற்றிய விழிப்புணர்வு எத்தனை பேர்கிட்ட இருக்குன்னு சொல்லுங்க. பகிர்வுக்கு நன்றி சகோ.
மிகவும் அருமையான தகவல் நன்றி தோழரே
பயனுள்ள தகவல் நண்பா...
Very good brother thanks for the help
NALLA THAGAVAL
nallathu nanparay. naan neenda nalaga patta chitta eduthu enathu pakuthi ulavar nanbarkalukku kodouthu vanthen. aanal tharpothu login password ketkirathu. akava ennakku patta chitta yethida uathavunkal. yenathu cell: 9943235248
by srinivasan
நான் தாங்கள் கொடுத்துள்ள சுட்டியை சொடுக்கினால் HTTP Status 404 - /eservicesnew/land/chitta_ta.html என்று மட்டும் தனி விண்டோவில் வருகிறது, வேறு ஒன்றும் வரவில்லை ஏன்?.
தனியாக முயற்சிப்போமென்று edistrict.tn.gov.in/eservicesnew/land/chitt போனால் விவரங்கள் இல்லாமல் வெறும் அட்டவணை மற்றும் வருகிறது, I am so confued & tired
realy supper
realy supper
Links not working please update....
Super useful comment
பிரதர் ஒரு சின்ன என்னுடைய தாத்தா சொத்து நான் பார்த்தபோது பட்டாஎண் இருந்தது ஆனால் சர்வே எண்ணை
பெறுவதற்கு எப்படி நாம் செயல்பட முடியும்
Post a Comment