பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

Thursday, 1 March 2012

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.    இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் 
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் 

விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....



மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

46 உரமிடுபவர்கள்:

Senthil said...

நன்றி நண்பரே. பட்டா நிலத்தை வாங்குவதற்கும், கிராம நத்தம் நிலத்தை வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்? கிராம நத்தம் நிலம் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? பிற்காலத்தில் என்னால் விற்க முடியுமா?

மிகவும் நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான பதிவு சார் ! நன்றி !

ADMIN said...

பயனுள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!!

உழவன் said...

//கிராம நத்தம் நிலம் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? பிற்காலத்தில் என்னால் விற்க முடியுமா?//

கிராம நத்தம் நிலத்தில் என்ன பிரச்னை என்றால் உதாரணத்திற்கு நீங்கள் 5 வருடமாக கிராம நத்தத்தில் இருகீர்கள் என்றால் உங்களது பெயர் சிட்டா அடங்களில் இருக்கும் FMP கூட உங்கள் வீடு தெரியும்..ஆனால் பட்டா பெறாமல் நீங்கள் விற்க முடியாது..
உடனடியாக பட்டா பெறுவது அவசியம்..

உழவன் said...

என் தளத்திற்கு வந்தமைக்கும் படித்தமைக்கும் நன்றி அண்ணா..

உழவன் said...

என் தளத்திற்கு வந்தமைக்கும் படித்தமைக்கும் நன்றி..நண்பரே..

ராஜி said...

அவசியமான விசயத்தை பற்றி விரிவாக விளக்கமா பகிர்ந்தமைக்கு நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

ராஜா நிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்.
குட் போஸ்ட்.

Sridharan said...

அருமையான மிகுந்த பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

arasan said...

சில விடயங்கள் தெரிந்து வைத்திருந்தாலும் பல விடயங்களை இன்றுதான் உங்களின் பதிவு மூலம் அறிந்து கொண்டேன் ..
இது போன்ற நல்ல விடயங்களை தொடர்ந்து வழங்க வேண்டிக்கொள்கிறேன் நண்பா ..
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

தமிழ்த்தோட்டம் said...

பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

இராஜராஜேஸ்வரி said...

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.//

பயனுள்ள தகவல்கள்.. நன்றி.. பாராட்டுக்கள்..

aravintraj said...

super fine and excellent never studied

Wanderer said...

மிகவும் பயனுள்ள பதிவு!

நத்தம் புறம்போக்கு என்றால் என்ன?
அப்படிப்பட்ட இடத்திலுள்ள வீட்டை வாங்கலாமா?
பீம் நோட்டீஸ் என்றால் என்ன?

என்னுடைய இடத்திற்கு கம்ப்யூட்டர் தாசில்தார் பட்டா கொடுத்துள்ளார். ஆனால், VAO இது சீலிங்கில் உள்ளது, எனவே சிட்டா கொடுக்க இயலாது என்கிறார். எப்படி இதை சரி செய்வது?

நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக said...

நகல்மனு, வில்லங்க சான்று மனுகளுக்கு கட்டணம் எவ்வளவு? மிக தெளிவாக வேண்டும் நன்பரே, E.C யில் ஒவ்வொரு ENTERக்கும் கட்டணம் உண்டா ? மனுவல் E.C க்கு கட்டணம் எப்படி கணக்கிட படுகிறது ?

Unknown said...

அவசியமான விசயத்தை பற்றி விரிவாக விளக்கமா பகிர்ந்தமைக்கு நன்றி

நான் சமூக மருத்துவர் said...

மிகவும் முக்கியமான மற்றும் பயனுள்ள தகவல் இது.
இதை வழங்கியதற்கு மிகவும் நன்றி..............!!!

ss said...

useful information ... Thank you sir

Anonymous said...

நண்பரே
வில்லங்க சான்று பெற என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகின்றேன்

Lakshmanaperumal Mallappan said...

எங்கள் குடும்பம் கடந்த 75 வருடமாக 6 செண்ட் உள்ள ஒரு இடத்தை அனுபவித்து வருகிறது. .60 வருடத்திருக்கு முன்பும் எங்கள் சொந்தங்கள் அந்த இடத்தை சுற்றி உள்ள நிலத்தை அனுபவித்து வந்தனர் , அதை அதன் பின் அந்த 6 செண்ட் இடத்தை மட்டும் எங்களுக்கு ஒதுக்கி விட்டு வேறு ஒரு நபருக்கு மற்ற இடத்தை விற்று விட்டனர் . ஆனால் அந்த 6 செண்ட் இடத்திருக்கு உண்டான எந்த ஒரு ஆவணமும் எங்களிடம் இல்லை .
இதற்கு பட்டா ஏதும் வாங்க முடியுமா ?

உழவன் said...

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

நண்பரே மேலே குறிப்பிட்ட பக்கத்தில் சென்று பாருங்கள் உங்களுக்கு தேவையான அளவு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

உழவன் said...

நண்பரே நீங்கள் 75 வருடமாக வசித்து வருகிறீர்கள் என்கிறீர்கள் அதனால் நீங்கள் வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சாரவரி போன்றவற்றை செலுத்தி வந்திருப்பீர்கள் அல்லவா அதை வைத்துக்கொண்டு VAO சென்று கேட்டால் அதற்கான முறையை பற்றி உங்களுக்கு பதில் அளிப்பார்..

Bharath Computers said...

ரியல் எஸ்டேட் மூலம் வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு வங்கி கடன் பெற நினைக்கிறேன். இதில் அந்த இடத்திற்கான பட்டா வாங்குதல் அவசியமா?

உழவன் said...

//Bharath Computers
ரியல் எஸ்டேட் மூலம் வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு வங்கி கடன் பெற நினைக்கிறேன். இதில் அந்த இடத்திற்கான பட்டா வாங்குதல் அவசியமா//

கண்டிப்பாக வேண்டும்...ரியல் எஸ்டேட் மட்டுமின்றி எப்படி வாங்கினாலும் நிலத்திற்கான பட்டா மிகவும் அவசியம்..

உலக முக்குலத்தோர் அமைப்பு said...

நன்றி நன்பரே மிகவும் தேவை உங்கள் சேவை

Unknown said...

நண்பரே எனக்கு
ஊர் பொது இடம் (டிரஸ்ட்) என்று
இருக்கு இந்த இடத்திர்க்கு பட்டா வாங்குவதர்கு என்ன செய்வது தாசில்தாரிடம் எல்லா சான்றும் கொடுதும் முடியாது ஊர் பொது இடம் (டிரஸ்ட்) என்று சொல்கிரார்கள்
என்ன செய்ய please help you

மு செல்வகுமார் said...

அருமையான பதிவுகள்...தேவையான சேவை...நல்ல முயற்சி தொடரட்டும் நண்பரே....வாழ்க வளமுடன்
..

மு செல்வகுமார் said...

நல்ல முயற்சி நண்பா ...கலாம் கண்ட இளைஞனே...ஏற்றம் தரும் உழவனே..வாழ்க வளமுடன்

Unknown said...

நிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்.
நன்றி.
கண்ணன்
ஆணைகுப்பம்

Unknown said...

சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது.நன்றி

Amalvimal said...

பல விசயங்கள் பற்றி (பட்டா,சிட்டா,அடங்கல்) மிக தெளிவாக தெரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவியது.நன்றிகள் பல. தொடர்ந்து பதிவிடுங்கள்.
ஆ.அமல்ராஜ்.
கோபி செட்டிபாளையம்.

Unknown said...

Good information

Unknown said...

நன்றி

Yogesh said...

நத்தம் பட்டா வில்0.0431.5 என்பது எவ்வளவு அடி

Yogesh said...

பட்டாவில் 0.0431.5 பரப்பளவு எவ்வளவு அடி

Unknown said...

நன்றி பட்டா பற்றிய விவரங்களள் அறிந்து கொண்டேன்

Anonymous said...

Excellent, what a weblog it is! This web site presents helpful
information to us, keep it up.

Anonymous said...

Tremendous things here. I am very satisfied to see your post.
Thank you a lot and I am taking a look ahead to contact
you. Will you kindly drop me a mail?

Anonymous said...

Hi! I've been reading your website for some time now and finally got the courage to go ahead and give you a
shout out from New Caney Tx! Just wanted to tell
you keep up the fantastic job!

Anonymous said...

பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. இன்னும் நிறைய பயனுள்ள தகவல்கள் பகிரவும் நண்பரே

Arjun said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் பதிவுக்கு நன்றி

Anonymous said...

Fine way of telling, and good paragraph to get facts concerning my presentation subject matter,
which i am going to deliver in college.

Unknown said...

... அண்ணா
நான் இப்போது தான் ஒரு இடம் வாங்க போகிறேன் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது...💞🙏🏼💞

Unknown said...

மிக்க நன்றி நல்ல தகவல்கள்..

  © www.uzhavan.com 2013

Back to TOP