சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்:
Saturday 11 February 2012
பலரும் சொத்துகளை வாங்கும்போது, அதை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்து கொள்கின்றனர். தங்களது சொத்து பத்திரமாக உள்ளதாக கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு பதிவு செய்தல் அந்த சொத்தை வருவாய் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாக சொந்தமாகும். பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள்கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களை பெற்று, ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மனுதாரர், தனது மனுவுடன், ஆவனங்களின் செராக்ஸ் பரிதியை அளித்தால் போதும், எவ்வித கட்டணமும் வேண்டியதில்லை. மூல ஆவணங்களை கொடுக்க வேண்டியதில்லை.
கிராம நிர்வாக அலுவலர், நிர்வாக காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கு கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய் தோறும் பட்டா மாற்றத்துக்கான மனுக்களை பெற வேண்டும். விண்ணப்பித்த தேதியில் இருந்து இரண்டாவது வெள்ளிகிழமையன்று, தாசில்தார் அலுவகத்திற்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும். இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன் முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ சென்று சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைத்த சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கைஎழுத்திட வேண்டும். அன்றைய தினமே அலுவலக கணினியில், மனுவின் விவரத்தை துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
ஆவணக்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரீசீலீத்து, 2வது வெள்ளிகிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு 15 நாள்களில் பட்டா மாற்றம் செய்யவேண்டும். உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா என்றால் விண்ணப்பித்த தேதியில் இருந்து நான்காவது வெள்ளிகிழமை பட்டா உத்திரவை பெற வேண்டும். இதை பயன்படுத்தி சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் செராக்ஸ் பிரிதிகளுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து விரைவில் பட்டா பெற்று கொள்வதே சிறந்தது..........
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்...
19 உரமிடுபவர்கள்:
பயன்தரும் பகிர்வுக்கு நன்றி..
பதிவுக்கு வாழ்த்துகள்.அப்படியே என் ஓட்டும்
vanakkam thozhare
anaivarukkum thevaiyaana pathivu
thanks for sharing
keep blogging
sambathkumar
tamilparents
வணக்கம் நண்பரே ..
தங்களின் இந்த பதிவுக்கு என் நன்றிகள் ..
ஒரே மண்ணை சார்ந்த உங்களை இணையத்தில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி ..
தொடரட்டும் உங்களின் இந்த பயணம் ..
வாழ்த்துக்களுடன் அரசன்
தொடர்புக்கு - arasanunk@gmail.com
9952967645
முதல் வருகைக்கு நன்றி..
என் தளத்திற்கு வந்தமைக்கும் இணைந்தமைக்கும் நன்றி நண்பா..
வணக்கம் தோழரே...
எனக்கு மிகவும் மகிழ்ச்சி...
உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்
பல்சுவை பதிவர்கள்
அன்பின் உழவன் ராஜா
பயனுள்ள தகவல் - பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தகவலுக்கு நன்றி நண்பா
இன்றய அதிர்ச்சி ...
விஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..
என் தளத்திற்கு வந்தமைக்கும் படித்தமைக்கும் நன்றி..தோழா..
என் தளத்திற்கு வந்தமைக்கும் இணைந்தமைக்கும் நன்றி..நண்பரே
மிகவும் நல்ல மற்றும் தேவையான தகவல். நன்றி
www.tngovernmentjobs.in
பயனுள்ள தகவல். மிக்க நன்றி
செந்தில்
இந்த பட்டா ..... புதிதாக வாங்கிய வீட்டு மனைகளுக்கும் இது பொருந்துமா? ..... நான் வாங்கிய வீட்டு மனை வேறு ஊரின் கட்டுபாட்டில் உள்ள ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது...நான் பட்டா வாங்க அந்த ஊராட்சி தலைவரைத்தான் அணுகவேண்டுமா?
வணக்கம் நண்பரே..அனைத்திற்கும் பொருந்தும்.. நீங்கள் பட்டா வாங்க அந்த ஊராட்சியின் VAO தான் அணுகவேண்டும்..
பயனுள்ள தகவல் அன்பு சகோதரர் உழவன் ராஜா.....
எங்கிருந்து பெறப்பட்டது இதற்கான ஆதாரத்தையும் தாங்கள் பதிவிட்டால் நல்லது அப்பொழுதுதான் இந்த பதிவு முழமை அடையும் என்பது எனது கருது...
இன்றைய சூழ்நிலையில் ( என்னையும் சேர்த்து மனைகள் கண்மூடித்தனமாக வாங்கபடுகின்றது,அதுவும் குழுக்கள் முறையிலும் பல ரியல் எஸ்டேட் காரர்கள் வியாபாரம் செய்கின்றனர்....கவலைக்கிடம்..மக்கள் விழிப்புணர்வு பெற நாம் பாடு படவேண்டும்
அன்புடன்
நௌஷாத் அலி
Post a Comment