பல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்
Wednesday, 28 March 2012
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கும் , வேறு தொழில்களுக்கும் செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேநீர் அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம் எல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.
நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்பிகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.
மருத்துவமுறை:
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4x160மிலி டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ள கூடாது.
3. 45 நிமிடங்களுக்கு பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் பொது 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்தி பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாள்கள இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
* உயர் ரத்த அழுத்தம் - 30 நாட்கள்
* வாய்வு கோளாறுகள் - 10 நாட்கள்
* சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
* புற்று நோய் - 180 நாட்கள்
* காசநோய் - 90 நாட்கள்
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.
"நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்...
ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே:
இப்போதெல்லாம் கிராமத்திலும், நகரபுறங்களிலும் பிரிட்ஜ் பயன்படுதுத்வோர் எண்ணிக்கை அதிமாகிவிட்டது. அதனால் குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர் தான் பலரது தாகத்தை தணிக்கிறது.
இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட உணவில் உள்ள எண்ணெய் துகள்களை கெட்டியாகி விடுகிறது.
இதனால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகிவிடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்னை வரலாம். என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.
இதய நோயாளிகள் சாப்பிடும் போது கூல் வாட்டரை தொடவே கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உன்மைதான? என்பதை நீங்கள் ஆய்வுசெய்து நிருபித்து கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து பிரிட்ஜ்ல் வைத்து விடுங்கள்.சில மணி நேரம் கழித்து அதை எடுத்து பாருங்கள் அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போல் தோன்றும். ஆனால் அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.
உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடிந்ததும் நம் உடலுக்குள் ஜூஸ் வாட்டர் சென்றால் எண்ணெய் துகள்கள் இது போன்று தான் மாறி சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றன....
5 உரமிடுபவர்கள்:
நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்...
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. நன்றி..
நன்றி நண்பா ..
சரியான நேரத்தில் மிகவும் சரியான தகவலை கூறி இருக்கீங்க ..
அதவும் வெய்யில் காலம் ஆரம்பாமாகிவிட்டது .. நீரின் தேவையை உணர்த்தியும் விட்டிர்கள் ..
நன்றி .. நான் இப்பவே போறேன் தண்ணி அடிக்க .. சீ சீ தண்ணி குடிக்க ..
அவசிய பதிவுக்கும் , அற்புத தகவலுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் ..
சரியான சமயத்தில் சரியான பதிவு ! நன்றி நண்பரே !
somebody says it is wrong
தேவையான பதிவு..
நன்றி நண்பரே!
Post a Comment