சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - பகுதி 1
Thursday, 3 May 2012
இன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற விஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது.
எண் | இனம் | சீனாவில் | இந்தியாவில் |
1 | தொழிலாளர் உற்பத்தி திறன் | இந்தியாவைவிட 3 முதல் 4 மடங்கு அதிகம் | ஏனோதானோ என்ற மற்றும் எண்ணம் |
2 | தொழிலாளருக்கு சலுகை | உணவு, உடை, வீடு, ஆகியவற்றில் அரசு மான்யம் கிடைக்கிறது. எனவே தொழிற்சாலைகள் அதிக சம்பளம் தர வேண்டியதில்லை | அரசின் உதவிகள் அரசு இல்லை கெடுபிடிகள் தான் அதிகம் |
3 | இடு பொருள்களின் விலை | அ) இயந்திரங்கள் இறக்குமதிகளுக்கு 5%க்கும் குறைவான சுங்க வரி ஆ) மூலபொருள்கள் இறக்குமதி | அ) இயந்திரங்கள் இறக்குமதி சுங்க வரி 22.45% |
4 | வங்கி வட்டிகள் | அ) வங்கி வட்டி விகிதம் 4.6% ஆ) திரும்ப செலுத்தபடாத கடனுக்கு வட்டி சரியாக செலுத்தினால் மூலதன பங்காக மாற்றும் வசதி | அ)வட்டி 14முதல்18 % ஆ)கடன் திரும்ப செலுத்தாத நிறுவனத்தை வங்கிகள் மற்றும் அரசு நிதி நிறுவனங்கள் முற்றுகையிட்டு விரைவில் மூடபடுதல் |
5 | உற்பத்தி கொள்கை | குறைந்த லாபம் அதிக அளவு உற்பத்தி | குறைந்த உற்பத்தி அதிக அரசு வரிகள் கட்டணங்கள் உற்பத்தி அதிகரிப்புகள் விரிவாகதிற்க்கு உரிமங்கள் கிடைப்பதில் மிகுந்த கால தாமதம். பல சந்தர்பங்களில் கிடைப்பதில்லை |
6 | பொருள் விலை | மிக உயர்ந்த அல்ல. ஆனால் போட்டியாளரை விட மிக குறைந்த 10% விலை | சரியான கொள்கை இல்லை |
7 | தர முன்னுரிமை | OEM சப்ளையில் பத்து லட்சம் பொருள்களுக்கு ஒன்று தான் reject செய்யப்படும். ஸ்பேர் மார்க்கட்டில் குறைந்த விலை | நடைமுறையில் இல்லை |
8 | ஏற்றுமதி ஊக்குவிப்பு | கண்காட்சிகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. L.C இருந்தால் ஒரு மாதத்தில் சப்ளை முடியும் | கண்காட்சிகள் ஏனோதானோ? வங்கிகளின் அசட்டையால் குறைந்த பட்சம் 3 மாதம் அவகாசம் தேவை |
9 | வெளிநாட்டு அரசாங்க சப்ளைக்கு சலுகை | வட்டியில்லா கடனில் அரசு அனுமதிக்கிறது | வசதி இல்லை. அதுமட்டுமில்லை உள்நாட்டில் அரசுதுறைகள் அரசு சார்பு நிறுவனங்கள் சிறு குருந்தொழில்களிடம் இருந்து உற்பத்தி பொருள்கள் வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அரசு ஆணை காற்றில் பறக்க விடப்படுகிறது. அப்படியே வங்கி விட்டாலும் ஆண்டு கணக்கில் பணம் நிலுவை. |
10 | உற்பத்தி அளவு( நல்ல மற்றும் தரம் குறைந்த பொருள்கள் ) | மிக சிறந்த பொருள்கள் உயர்தரத்தில் உலக சந்தையில் வருகிறது. அதே தொழிற்சாலையில் தரம் குறைந்த பொருள்கள் | ஒரு போதும் சாத்தியமில்லை |
கொசுறு: இந்த பதிவில் மீதம் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்பம்,கூடுதல் நேர வேலை சம்பளம், தொழிலாளர் நல சட்டம், குறைந்த பட்ச சம்பளம், தொழிற்சங்கங்கள், சரக்கு போக்குவரத்து துறை, மின்சாரம், அரசு இயந்திரம்
லஞ்ச ஊழல், துறைமுகங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்...
நன்றி: கொடிசியா
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்..நண்பர்களே..
13 உரமிடுபவர்கள்:
பதிவு அருமை நல்ல விளக்கம் தொடருங்கள்
பதிவு அருமை நல்ல விளக்கம் தொடருங்கள்
சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது என்பதை விளக்கியதற்குப் பாராட்டுக்கள்..
உழவரே உலக தரத்தில் உங்கள் பதிவு ..
எப்படியும் நம்ம நாடு உருப்படாது என்று தான் சொல்லவருவதாய் எடுத்துக்கொள்கிறேன் ..
பதிவுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி ..
வெட்கப்படுவதைத் தவிர உடனே செய்ய வேறொன்றும் இல்லை! அதனால் வெட்கமும் அவமானமும் படுகிறேன்!
விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !
ஆங் .., மேட்டர் இதுதானா? அடுத்த பாகம் எப்போ தம்பி வெளிவரும் ..?
///வா.கோவிந்தராஜ், said...
பதிவு அருமை நல்ல விளக்கம் தொடருங்கள்///
கண்டிப்பாக தொடர்கிறேன் ..வருகைக்கும் கருத்துரைக்கும் ரொம்ப நன்றி
//இராஜராஜேஸ்வரி said...
சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது என்பதை விளக்கியதற்குப் பாராட்டுக்கள்..//
ரொம்ப நன்றி அக்கா...
//அரசன் சே said...
உழவரே உலக தரத்தில் உங்கள் பதிவு ..
எப்படியும் நம்ம நாடு உருப்படாது என்று தான் சொல்லவருவதாய் எடுத்துக்கொள்கிறேன் ..
பதிவுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி ..///
அண்ணா என் பதிவு உலக தரத்திற்க்கு கொண்டு சென்றமைக்கு நன்றி அண்ணா...
அப்படியே எடுத்து கொள்(ளு)ங்கள் அண்ணா
///சுபாஷ் said...
வெட்கப்படுவதைத் தவிர உடனே செய்ய வேறொன்றும் இல்லை! அதனால் வெட்கமும் அவமானமும் படுகிறேன்!//
கண்டிப்பாக....நானும் தான்..நண்பா
//திண்டுக்கல் தனபாலன் said...
விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !//
ரொம்ப நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்...
// வரலாற்று சுவடுகள் said...
ஆங் .., மேட்டர் இதுதானா? அடுத்த பாகம் எப்போ தம்பி வெளிவரும் ..?//
ஆங் .., மேட்டர் இதுதான் அண்ணா...
வந்துடுச்சுல...ஹா ஹா ...
Post a Comment