‘என்றென்றும் வைரம்’ - வைரத்தின் வரலாறு

Saturday 1 September 2012

வைரம் இந்த பெயரை சொன்னாலே பலருக்கு ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலாக இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கபட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டாவில் என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில தான் வைரங்கள் கிடைத்தது. 
இங்கிருந்து தான் வைரம், அந்த காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்னே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு ( இன்றைய ஒரிசா ) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வெனிஸ் அப்போது ஐரோப்பியாவின் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது. இந்திய வைரங்கள் பட்டை தீட்டபடாத இயல்பு நிலையில் வெனிஸ்க்கு அனுப்பப்பட்டன. இவ்வைரங்கள் அருகிலிருந்த சிறு சிறு ஐரோப்பிய நகரங்களில் பட்டை தீட்டப்பட்டன. அதுபோன்ற சிறுநகரங்களில் ஒன்றுதான் இன்று உலகின் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் முதன்மையாக விளங்கும் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரம். இந்தனைக்கும் வைரம் பட்டை தீட்டும் தொழில்நுட்பம் இந்தியர்களிடமிருந்துதான் பிற நாடுகளுக்கு சென்றது. ஆனால் இத்தொழில்நுட்பம் ஆண்ட்வெர்ப் நகரத்தில் நவீன கருவிகளின் உதவியால் பன்மடங்கு நுணுக்கப்பட்டது. வைரங்கள் பட்டை தீட்டும் முறையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டு பிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் வைரத்தை வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும் என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?
பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோமீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்ட் கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது தான் சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் என் இவ்வளவு ஜொலிக்கிறது?
வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 % ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்து திருப்பி வெளியிலேயே அனுப்பிவிடும். வேறு எந்த ரத்தினதுக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Total Internal Reflection (TLR)  முழுமையான உல்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம்பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
வைரத்தின் ஆங்கில பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி Dimond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட் (Carat) முறையில் எடைபோடுகிறார்கள்?
இந்தியாவிற்கு பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கபட்டது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப்படாத  காலகட்டத்தில் (Carob Seeds) என்ற விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏன்னென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை. இந்த கார்ப் என்ற பெயர் மருவி, காலபோக்கில் காரட் என்றாகி விட்டது. ஒவ்வொரு கார்ப்விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது காரட் கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும்?
ஒரு காரட் என்பது நூறு பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்கள்.
உதாரணம். 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை காரட்.

ப்ளூ ஜாகர் ( Blue Jager ) என்றால் என்ன?
தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் ( Jager Fontein ) என்ற இடத்தில ஒரு வைரசுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒரு நீல நிற ஒளியை கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்போது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன்?
ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும்போது ஏற்படும் சேதம், சந்தைபடுத்துதல், (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் சில செலவுகள் சேரும்போது விலை கூடுகிறது.

இந்தியாவில் வைரம் எங்கு கிடைக்கிறது?
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா [ Panna ] என்னும் இடத்தில உள்ள வைரசுரங்கதிலுருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன?
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீடியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு [ Round Brilliant Cut ] என்று பெயர். இதுதான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே அதனை விளக்கவும்?
வைரத்தை வெட்டவோ பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து எல்லா ரத்தின கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைர கல்லில் உலகில் உள்ள எந்த பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

வைரத்தில் தோஷம் என்றால் என்ன?
அடிப்படையில் வைரம், நன்றாக ஒருகிணைந்த கார்பன் மூலகூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலகூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கருப்பு கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியல் பெயர் கிராபைட்.
வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே கருப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நாம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது?
வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், வெளிர்பச்சை, வயலட், கலர்களில் கிடைக்கிறது. முழுக்கருப்பிலும் காணபடுகிறது.

பட்டை தீட்டப்பட்ட வைரக்கல் எப்படி இருக்கும்?
பட்டை தீட்டப்பட்ட வைரக்கல் மேலே 33 பக்கங்களும் கீழே 24 பக்கங்களும் கொண்டுள்ளது. இந்த வடிவ வைரக்கல் மிகவும் ஒளிமயமானது. இந்த வடிவம், உலகில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் கிடைத்த மிகபெரிய வைரம் எது?
கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப்பெரியது. இதன் எடை 105.80  காரட்டுகள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிக பெரிய வைரம் எது?
தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிக பெரியது. இதன் எடை 545.67 காரட்டுகள். தாய்லாந்து அரசிடம் இது உள்ளதுஉலகின் மிக பெரிய வைரம் தென்னாபிரிக்காவில் கிடைத்திருந்தாலும் 1866-ஆம் ஆண்டு வரை உலகின் ஒரே வைர கிடங்கு இந்தியா மட்டுமே. கி.மு 296-இல் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில் வைரத்தை பற்றிய குறிப்புகள் இருகின்றன.

மேலும் வைரத்தை அன்பின் அடையாளமாக உருவகப்படுத்திய A.N.அயர் நிறுவனம் அன்பு நிலைத்திருப்பது போலவே ஒருவர் பரிசாகப் பெற்ற வைரமும் கடைசி வரை அவருடனே இருக்க வேண்டும் என்ற ரீதியில் வைரத்திற்கு நெடுநாளைய உணர்வுபூர்வ மதிப்பைத் தன்னுடைய என்றென்றும் வைரம் (Diamond Foreverஎன்ற வரலாற்றுப் புகழ் வாய்ந்த விளம்பரத்தின் மூலம் தேடித்தந்தது. இதனால் மக்கள் வைரத்தை மறு விற்பனை செய்வது என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனதால் வைரத்திற்கான இரண்டாம் சந்தை (Secondary market) இல்லாமலே போனது. இதனால் விற்பனையில் எப்போதுமே புதிய வைரங்களே புழங்கி வந்தன. இவ்வாறு வைரம் ஒரு ஆடம்பரப் பொருளாகவும்கெளரவம் மற்றும் செல்வாக்கின் சின்னமாகவும் மக்கள் மனதில் பதிந்து கொண்டே வருகிறது.

டிஸ்கி : இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....அப்படியே உங்களது ஓட்டுகளையும் பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே..

மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

9 உரமிடுபவர்கள்:

MARI The Great said...

தம்பி நம்ம ப்ளாக்கு போட்டியா வந்திருவாரு போலிருக்கே, அதான் வரலாறுக்கு :)

BTW, informative post brother and keep blogging :)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பல விளக்கங்கள்...

நமக்கு எங்கே சார் Black Spot தெரியப் போகிறது... தெரிவதெல்லாம் blogspot தானே...

தொகுப்பிற்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

Admin said...

நல்ல விரிவான தகவல்கள்.

செய்தாலி said...

ம்ம்ம் ...
வைரம் பற்றிய வைர வரிகளில்
வைரைமான விளக்கம் தம்பி

நல்ல தகவல்கள் உள்ள அருமையான பதிவு

காலையில் வணக்கம் வைத்துவிட்டு பிறகு காணவில்லையே

Admin said...

விளக்கமான பகிர்வு..அருமை

வெற்றிவேல் said...

வைரம் பற்றிய அருமையான தகவல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி, தொடருங்கள்...

சசிகலா said...

வைரமா நமக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லையென்றிருந்தேன் தங்கள் பகிர்வின் மூலம் அறிந்ததில் மகிழ்வே.

Unknown said...

அணிகலன்களின் இராஜாவுக்கு (வைரம்) இந்த உழவன் இராஜாவின் தொகுப்புரை அற்புதம், அத்தனையும் ஜொலிக்கும் வைரமாய் இருந்தது.

thennith said...

உங்களுக்கு வைரம் வேண்டுமா

  © www.uzhavan.com 2013

Back to TOP