விவசாயி உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை அவரே விற்பனை செய்ய முடியுமா!!! eNAM ஒரு பார்வை!!!

Sunday 24 June 2018

விவசாயமே இந்தியப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய தொழிற் களமாக இன்றளவும் இருக்கிறது. இதர பொருளாதாரப் பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களைவிட விவசாயம் செய்யும் தொழிலாளர்களுக்கான வருமானம் என்பது மிகவும் குறைவுதான். அதைப்போல உற்பத்தித்திறன் சார்ந்த ஏற்றத் தாழ்வு, நிலையற்ற விலையாலும், பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் மாற்றங்களாளும் பாதிக்கப்படுகின்றனர். 
வேளாண் குறித்த அனைத்து பிரிவுகளிலும் விவசாயிகளுக்கு சரியான தகவல் கிடைத்தல் வேண்டும். தகவல் கிடைப்பது என்பது விவசாயிக்கு புதிய தொழில்நுட்பங்கள், புதிய சந்தை வாய்ப்புகள் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதாக அமைய வேண்டும். அப்படி பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.

தேசிய வேளாண் சந்தை (eNAM) National Agriculture Market Portal:
வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை அமைப்புகள் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வுகளாலும் மண்டி வரி விதிப்புகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. வேளாண் சந்தை எல்லா மாநிலங்களிலும் வெளிப்படையானதாகவோ ஒரே சீரானதாகவோ இருப்பதில்லை. லாபகரமான விலையை விவசாயிகள் பெறுவதற்கு இவை பெரிய தடைக்கற்களாக உள்ளன.  இதனால் ஒவ்வொரு மாநிலமும் பல சந்தை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தனித்தனி பகுதிகள் வேளாண்மை தயாரிப்பு விற்பனை குழு (Agricultural Produce Marketing Committee) மூலமாக நிர்வகிக்கப்படுகிறதாம். இந்த சவால்கள் மாநில மற்றும் தேசிய மட்டத்திற்கான ஆன்லைன் வர்த்தக மேடையில் ஒரு ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்குவதற்கு இந்த eNAM பயன்படுகிறது.

📌National Agriculture Market eNAM: முதலில் இணையதளத்தின் மேலே வலது பக்கத்தில் மொழியை (choose language) தேர்ந்துதெடுக்க வேண்டும். (உங்களது விருப்பம்😄) Approved commodity அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள்

இந்த வர்த்தகத்தில் இதுவரைக்கும் 72லட்சம் விவசாயிகள்  பதிவு செய்திதிருகிறார்கள். இங்கு விவசாயி என்ன என்ன பொருட்கள் விற்பனை செய்யலாம் என ஒரு 90 வகையான (Approved commodity) அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் இருக்கிறது. கீழே உள்ள படத்தில் விவரங்கள் இருக்கிறது. 

இரண்டாவது தமிழ்நாட்டில் எங்கெங்கு மண்டிகள் இருக்கு என்று தெரிந்து கொள்ள வேண்டும். கீழே உள்ள படத்தில் இருப்பது போல பதிவு செய்யப்பட்ட மண்டிகள் விவரங்கள் இருக்கிறது அதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் நமது பொருட்களை விற்பனை செய்ய எளிமையாக இருக்கும். Enrolled Mandis (பதிவுசெய்யப்பட்ட மண்டிகள்)

இப்போது என்ன என்ன பொருட்கள் விற்கலாம், எந்த எந்த மாவட்டத்தில் மண்டிகள் உள்ளதை தெரிந்து கொண்டோம். அடுத்து இந்த இணையத்தில் எப்படி பதிவு (Register) செய்வது என்று தெரிந்துகொள்வோம். இந்த லிங்க் கிளிக் செய்து அதில் Register என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் ஓபன் ஆகும். அதில் பொருட்களை விற்ப்பவர் (seller) / வாங்குபவர் (Buyer) என இருக்கும் இப்படி ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து உங்களது வங்கி கணக்கு எண், ஆதர் எண் எல்லாவற்றையும் கொடுத்து Submit செய்தால் உங்களது மொபைல்க்கு ஒரு SMS வரும் அந்த லிங்க்கில் சென்று உங்களது பாஸ்வோர்டு கொடுத்து உறுதி செய்து கொள்ளவும்.
புதிய பதிவு (New Registeration) 

இது நிரந்தரமான கணக்கு அல்ல நீங்கள் நிரந்தர கணக்கு உறுதி செய்துகொள்ள அதில் உள்ள Toll Free Number (1800 270 0224) அழைத்து உறுதி செய்யலாம் இல்லைஎன்றால் உங்களது நகரத்தில் eNAM அலுவலகத்திற்கு சென்று  செய்துகொள்ளலாம். இனிமேலாவது நாம் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை நாமலே விலையை நிர்ணயம் செய்யனும். 

இதுபோலவே இ-ராஷ்ட்ரிய கிஸான் அக்ரி மண்டி e- RASHTRIYA KISAN AGRI MANDI (e-RAKAM) என்ற வசதியும் உள்ளது இதுவும் மேலே சொன்னது போல நமது விவசாய விளைப்பொருட்களை விற்கவும், வாங்கவும் முடியும். இப்படி செய்வதன் மூலம் சர்வதேச அளவில் நமது கிராமப்புற விவசாயிகள் விற்பனை வாய்ப்புகளைப் பெற வாய்ப்புள்ளது. 

நமது நண்பர்கள் மனதில் நினைப்பது என்னவென்று கேட்கிறது ஏன்டா தமிழ்நாட்டில விவசாயம் செய்ய தண்ணியே இல்லயாம் இதுல நீ வேற நாம உற்பத்தி செய்யுற பொருளுக்கு நாமலே விலையை நிர்ணயம் செய்யுறதா போயி வேலைய பாருடா😄😄😄 நமக்கும் காலம் வராமலா போயிடும்!!!!.

டிஸ்கி😃: அடுத்து வரும் பதிவில் நமது மாவட்டங்களில் உள்ள மண்டிகளின் முழு விவரங்களையும் (MARKET PROFILE), குளிர்சாதன பெட்டக வசதி (COLD STORAGE) எங்கெங்கு உள்ளது பற்றியும் விரிவாக தெரிந்துகொள்வோம். 
மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

0 உரமிடுபவர்கள்:

  © www.uzhavan.com 2013

Back to TOP