PPF கணக்கு துவங்கி சேமிப்பு செய்யலாமா? என்ன நன்மைகள்?

Saturday, 12 October 2024

PPF
PPF என்று அழைக்கப்படும் Public Provident Fund என்பது தமிழில் பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிறது. இந்த PPF திட்டத்தை மத்திய அரசால் ஆதரிக்கப்படும் வரியில்லா சேமிப்பு திட்டம் என்று சொல்லலாம். இந்த PPF திட்டம் 1968 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது.  இது இந்தியர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும், தனியார் பாதுகாப்பில் பணிபுரியும் மக்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குவதற்காகவும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், அல்லாத ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர், கடை வைத்து சிறு தொழில் செய்வோர், விவசாயம் செய்வோர், கூலி வேலைக்கு செல்வோர் போன்றவர்களுக்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

நிரந்தர வேலை செய்பவர்களுக்கு எப்படி PF போன்ற திட்டங்கள் வழங்கப்படுகிறதோ அதேபோல தனிநபர்கள் பயன் பெறுவதற்காக இந்திய அரசு இந்த PPF திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

இந்த PPF திட்டம் அதிக வட்டி கொடுக்க கூடிய ஒரு திட்டமாகும்.  இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டு கணக்கிலும் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு, பின் அது இந்திய அரசால் வட்டி தொகை நம் கணக்கில் செலுத்தப்படுகிறது.

யாரெல்லாம் கணக்கு துவங்கலாம்?

  • இதில் கணக்கு துவங்குவதற்கு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.
  • இதில் 18 வயது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு Minor Account திறக்கலாம்.
  • வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கு (NRI) இந்த PPF Account திறக்க முடியாது. NRI ஆகும் முன்பே துவங்கியவர்கள் தொடரலாம்.
  • இதில் முதலீடு செய்ய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் 18 வயதிற்கு குறைவானவர்களும் இத்திட்டத்தில் சேரலாம்.

இந்த திட்டத்தின் நன்மைகள்?
  • இது அரசு ஆதரவு செய்யும் திட்டம் என்பதால் இதில் செய்யும் முதலீடு மற்றும் வட்டிக்கு கட்டாயம் பாதுகாப்பு இருக்கும்.
  • இந்த PPF திட்டத்தில் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.
  • வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ஆண்டுக்கு அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை PPF திட்டத்தில் முதலீடுச் செய்யும் தொகைக்கு வரிக் கழிவு பெறலாம். அதாவது 1,50,000 ரூபாய் வரை PPF திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்கு வருமான வரி கட்டத் தேவை இல்லை.
  • மூன்று வருடங்களுக்குப் பிறகு நாம் செலுத்திய PPF தொகை மீது கடன் பெறலாம்.
  • 15 வருடம் கழித்து கிடைக்கும் முழுத் தொகைக்கும் வரியில்லை.
  • இத்திட்டத்தில் வங்கி சேமிப்பில் கிடைக்கும் வட்டியை விட அதிகமான வட்டி இதில் கிடைக்கும்.
கால அளவு என்ன?
  • இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 15 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், இடையில் பணத்தை எடுக்க முடியாது.
  • அப்படி முடியாதவர்கள், ஐந்து ஆண்டுகள் முடிவில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கான வழிமுறைகள் கடினமானது.
  • வருடத்திற்கு ஒரே தவனையில் முழு தொகையையோ அல்லது அதிகபட்சம் 12 தவனைகளாகவோ PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
PPF-ன் பரிந்துரைகள்!
  • வருடத்திற்கு குறைந்த பட்சம் தொகையாக ₹500 முதல் அதிகப் பட்சம் தொகையாக ₹1,50,000 வரை செலுத்தலாம்.
  • இதற்கு மேலும் செலுத்தலாம் ஆனால் ₹1,50,000 அதிகமாக செலுத்தும் தொகைக்கு வட்டி கணக்கிடப்படாது.
  • ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 தேதிக்குள் பணம் செலுத்துவது நல்லது.
  • இத்திட்டம் உங்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் கிடைக்கும். (தனியார் மற்றும் அரசு வங்கிகளிலும் துவங்க முடியும்)

டிஸ்கி😃: சேமிப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். மாற்று வழிகளுக்கான சிறந்த சேமிப்பில்  PPF கணக்கு ஒன்று. எனவே சேமிக்க முயற்சிக்கலாம்.
மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

0 உரமிடுபவர்கள்:

  © www.uzhavan.com 2013

Back to TOP