காசுக்காக தனது சேவையை தாரை வார்த்த (State Bank Of India) பாரத ஸ்டேட் பாங்க்!!

Thursday 3 October 2013

கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரதான கிளை பாரத ஸ்டேட் பாங்க் வங்கியில் தனது உறவினர் பையனுக்கு பணம் போடுவதற்காக வங்கிக்கு சென்றிருந்தேன் பணம் கட்டும் செல்லானை எடுக்க முயன்றபோது அருகில் செக்யூரிட்டி ஏம்பா தம்பி வங்கியில் எவ்வளவு பணம் செலுத்த போகிறாய் என்று கேட்டார் நானும் 3500 ரூபாய் என்று சொன்னேன். அதற்கு உடனே இந்த கிளையில் உங்களுக்கு Account இருக்கா என்று கேட்டார்
நானும் இல்லை என்று சொன்னேன் உடனே அவர் அப்போ நீங்க இங்க பணம் போடமுடியாது என்று கூறினார். உடனே ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் இந்த வங்கியில் பணம் போட வேண்டுமென்றால் இந்த கிளையில் உங்களுக்கு Account இருக்க வேண்டும் இல்லை என்றால் 10000 ரூபாய்க்கு மேல் தான் பணம் போட முடியும் என்றார். குறைவாக இருந்தால் எங்கு சென்று போட வேண்டும் என்று கேட்டேன் அதற்கு அவர் வெளியில் பாரத ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கிறது அங்கு சென்றுதான் போட வேண்டும் என்று சொன்னார் நான் கூட வேலை சுலபமாக முடியதான் இப்படி ஆரம்பித்துள்ளார்கள் என்று நம்பி அங்கு சென்றேன்.அப்போது அங்கு நடந்த கொடுமையான செயலை பற்றித் தான் இன்றைய பதிவு.

வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு உள்ளே சென்று அங்கு இருந்த ஒரு பெண் அலுவலரிடம் பணம் போட வேண்டும் என்று சொன்னேன் அதற்கு எவ்வளவு அமௌன்ட் என்று கேட்டார்கள் 3500 ருபாய் என்று சொன்னேன். உடனே அவர்கள் 70 ருபாய் எக்ஸ்ட்ரா செலுத்த வேண்டும் என்றார்கள் 70 ருபாய்யாயா எதற்கு என்று கேட்டபோது Transfer charges என்று கூறினார்கள். நான் உடனே வங்கியில் அப்படி ஒன்றும் கேட்பதில்லையே என்று சொன்னேன். அதற்கு இனிமேல் 10000-க்கும் குறைவாக இருந்தால் இது போன்ற வாடிக்கையாளர் சேவை மையத்தில் தான் நீங்கள் பணம் செலுத்த முடியும் என்று கூறினார்கள். உடனே எப்படி 70 ருபாய் கேட்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அங்கு ஒட்டியிருக்கும் பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
ஒன்றும் புரியலையே என்று சொன்னேன் அதற்கு பாரத ஸ்டேட் பாங்க் என்றால் நீங்கள் கட்டும் அமௌன்ட்-ல் 2% என்று கூறினார்கள். உடனே அந்த அலுவலர் நீங்கள் மற்ற வங்கிக்கு கூட நீங்கள் இங்கயே பணம் செலுத்தலாம் என்று சொன்னார் அதற்கு எவ்வளவு என்று கேட்டேன் மற்ற வங்கிகளுக்கு எல்லாம் 1% தான் என்று சொன்னார்கள். எதற்கு ஸ்டேட் பாங்க்கிற்கு மட்டும் 2% என்று கேட்டேன் அதற்கு இது ஸ்டேட் பாங்க் பிக்ஸ் செய்து விட்டது என்று சொன்னார்கள். இதில் எந்தெந்த வங்கிக்கு எல்லாம் பணம் செலுத்த முடியும் என்று கேட்தற்கு உங்கள் pay slip-ல் பின்னாடி இருக்கும் என்றார்கள். இதில் HDFC, Indian Overseas Bank என்ற இரண்டு வங்கியும் சேராதாம்.
கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொன்றிருந்தேன் பிறகு அந்த அலுவலரிடம் சென்று நீங்கள் எப்படி இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டதிற்கு OXIGEN என்ற எங்கள் நிறுவனம் பாரத ஸ்டேட் பாங்க் வங்கியிடம் Tie up வைத்து இருக்கிறோம் என்றார்கள். நீங்கள் மட்டும் தானா இல்லை வேறு யாரேனும் இப்படி வைத்துள்ளார்களா என்றேன் BLAZE மற்றும் ZERO MICRO - FINANCE Saving Support Fountation 
என்ற நிறுவனமும் வைத்துள்ளார்கள் என்றனர். விடுமுறை நாட்களில் கூட நீங்கள் பணம் செலுத்தலாம் என்றார்கள். (ரொம்ப முக்கியம் என்று மனதில் நினைத்துகொண்டேன்) வேறு வழி....ஆதலால் இனிமேல் பாரத ஸ்டேட் பாங்க் வங்கிக்கு 10000 குறைவாக கொண்டு சென்றால் அதற்கு உண்டான Transfer Charges Amount -யையும் கொண்டு செல்லுங்கள் நண்பர்களே!!
நன்றியுடன்
 - P.இராஜா
மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

14 உரமிடுபவர்கள்:

ப.கந்தசாமி said...

இப்போதுதான் இந்த தகவலைக் கேள்விப்படுகிறேன். ஆனால் இது நியாயமில்லை.

அருண் said...

நல்ல பதிவு

இராய செல்லப்பா said...

நண்பரே! வாடிக்கையாளரை எந்த வங்கியும் இப்படி தண்டிக்க முடியாது. உடனடியாக நீங்கள் OMBUDSMAN க்கு புகார் செய்யுங்கள். நியாயம் கிடைக்கும்.

Unknown said...

naanum maatikiten maapu

Unknown said...

Raja once i remains to you living in India... Who have money that's persons become mla,mp,ias,ips...etc.
one .this my advice or suggestions i read thought but we can't change anything without money ... That's customer service point legally enter that not bank mistake.this our mistake our elected the wrong person mp,mla,and counselors,presents,etc ...

ADMIN said...

பயனுள்ள பகிர்வு... வங்கிக்கு பணம்செலுத்தச் செல்லும் ஒவ்வொருவருக்கும் இத்தகவல்கள் பயன்படும். மிக்க நன்றி ராஜா.!

தி.தமிழ் இளங்கோ said...


தம்பிக்கு! நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்! உங்களுக்கு ஸ்டேட் பாங்கியில் எந்த கிளையில் கணக்கு இருக்கிறதோ அந்த கிளையிலோ அல்லது அதற்குண்டான சேவை மையத்திலோ பணம் கட்ட கட்டணம் கிடையாது. பத்தாயிரம் வரை சேவை மையத்தில் மட்டுமே கட்ட வேண்டும். ஆனால் வேறு ஒரு கிளையில் உள்ள கணக்கிற்கு பணம் செலுத்துவதற்கு மட்டுமே கட்டணம் வாங்குகிறார்கள்.. அடுத்த கிளையில் உள்ள கணக்கிற்கு கட்டணம் என்பது எல்லா வங்கியிலும் உள்ள நடைமுறைதான்.

உழவன் said...

வாங்க வணக்கம்..நான் பல வருடங்களாக வங்கியில் பணம் செலுத்தி கொண்டுதான் வருகிறேன் இப்படி ஒன்று நடந்ததே இல்லை..அதே வங்கி ஆனால் கிளை தான் வேறு அதற்கு எதற்கு Transfer Charges Amount ..மற்ற வங்கியில் இது போன்று இல்லை..

தி.தமிழ் இளங்கோ said...

அன்பு தம்பி P ராஜா அவர்களின் மறுமொழிக்கு நன்றி! உங்கள் பதிவை முன்னிட்டு நான் ” ஸ்டேட் வங்கியின் கியாஸ்க் சேவை http://tthamizhelango.blogspot.com/2013/10/blog-post_1102.html ” என்ற பதிவினை எனது வலைத்தளத்தில் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும். கருத்துரை தரவும். நட்புடன் ... ...

Jayaprakash said...

பயனுள்ள தகவல் உங்கள் பதிவு அனைதும் அருமை அண்ணா !!!

Anonymous said...

எனக்கு தெரிந்து கனரா வங்கி தவிர (அதுவும் 25000 வரை மட்டும்) மற்ற எல்லா வங்கியிலேயும் வேருகிளையில் உள்ள கணக்குக்கு பணம் செலுத்தும்போது இந்த அதிகப்படியான கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

Anonymous said...

நான் ஒரு Oxigen employee. நீங்கள் கூறுவது போன்ற சேவை உள்ளது. ஆனால் SBI யில் வழக்கம்போல் பணம் செலுத்தலாமே. Oxigen service option only. That's not Oxigen issue. Issue b/w bank officials and particular shop

Unknown said...

இது உண்மை.
நானும் அனுபவப்பட்டிருக்கிறேன்

  © www.uzhavan.com 2013

Back to TOP