நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?

Thursday 24 October 2013

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது.
சட்டம் பற்றிய முன்னுரை:
பொது உபயோகம் மற்றும் தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக தனியார் நிலங்களை, பயன்பாடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்கியபின், அரசு கையகபடுத்தலாம். இவ்வாறு அரசால் நிலம் கையகபடுத்துதல் தொடர்பான சட்டங்கள், நிலம் கையகபடுத்துதல் சட்டம்,1984 என அழைக்கப்படுகிறது.

சட்டம் பற்றிய விரிவான தகவல்கள்:
1. முதல் அறிக்கை:
நிலம் மற்றும் சொத்துகளை பொது மக்களிடமிருந்து கையகப்படுத்தும் முன், அவ்வாறு கையகபடுதுவதற்கு தனக்குள்ள ஆர்வம பற்றி அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் அறிவிக்க வேண்டும்.
அ. அரசிதழ் ஆணை
ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.
இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், பொதுமக்களுக்கு வசதியான இடங்களில் அறிவிக்கை.
இத்தகைய அறிவிப்புகளில் கடைசியாக வெளியிடப்பட்ட அறிக்கை வெளியான நாள், அறிவிக்கை நாளாக கருதப்படும். அறிக்கை வெளியான நாளன்று நிலம் மற்றும் சொத்தின் சந்தை விலையின் அடிப்படையில் நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

2. ஆட்சேபணைகளை விசாரணை செய்தல்:
அறிவிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்தில் ஆர்வமுடைய அல்லது சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபணைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

நிலம் கையகபடுத்துவதில் பொது நல நோக்கம் இல்லாதது, தேவைக்கு மேல் அதிக நிலம் கையகபடுத்துவது, கையகபடுத்தும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது அந்த இடத்தில பொது மக்கள் பயன்பாடு, வழிபாட்டுத்தலம், சமாதிகள் அல்லது மயானங்கள் இருப்பது போன்ற காரணங்களுக்காக நிலம் கையகபடுதுத்வதற்க்கு 
ஆட்சேபணை தெரிவிக்கலாம்.

இந்த கட்டத்தில், அறிவிக்கப்பட்ட இடத்திற்க்கு பதில் வேறு மாற்று இடத்தை கையகபடுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனைகள் கூறலாம். அத்தகைய ஆலோசனைகளுக்கு மதிபளிக்கவிட்டால் மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக உயர் மன்றத்தில் வாதாடலாம்.
அறிவிக்கைக்கெதிராக ஆட்சேபணை தெரிவித்தோரின் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக கேட்க வேண்டும். எனினும் அவசர நேரங்களில் அவ்வாறு அவர் கேட்பதை தவிர்க்கலாம்.

3. கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:
கையகபடுத்தும் முடிவை அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும்
அ. அரசிதழ் ஆணை
ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.
இ. நிலம் அமைந்துள்ள பகுதியில், இந்த அறிக்கை அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 1 வருடத்திற்குள்செய்யப்பட வேண்டும். இதில் கையகபடுத்தப்படும் நிலம் இருக்குமிடம் மற்றும் நிலத்தினை கையகபடுத்தபடும் நோக்கம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடபடவேண்டும்.

4. சம்பந்தபட்ட அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தல்:
கையகபடுத்தபடும் நிலத்தில் அல்லது அதன் அருகே மாவட்ட ஆட்சியரால் பொது அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இழப்பீடு கோருதல் மற்றும் அளவைகளில் உள்ள ஆட்சேபணைகளை 
தன்னிடம் குறிப்பிட்ட தேதியில் தெரிவிக்குமாறு, அந்த நிலத்தை பயன்படுத்தும் மற்றும் சம்பந்தபட்ட அனைவருக்கும் தனித்தனியே அறிவிப்பு அனுப்ப வேண்டும். அறிவிப்பு அளித்தபின், கோரிக்கைகளை தெரிவிக்க 15 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்

5. மாவட்ட ஆட்சியரின் உறுதி:
சம்பந்தபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்ட பின் கையகபடுத்தபடும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கான இழப்பீடு ஆகியவற்றை தெரிவித்து மாவட்ட ஆட்சியரால் உறுதி அளிக்கப்படும். உறுதி அறிக்கை, முதல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 2 வருடத்திற்குள் செய்யப்பட வேண்டும்.

சந்தை மதிப்பு, சந்தை மதிப்பிற்கான 12% விகிதத்தில் கணக்கிடப் பட்ட வட்டி மற்றும் சந்தை மதிப்பின் 30% மதிப்பில் ( கட்டாய கையகப்படுத்துதலுக்கான ஆறுதல் ) ஆறுதல் தொகை ஆகியவை இழப்பீடாக வழங்கப்படும்.

தீர்வுக்கான வழிமுறைகள்:
எந்த சட்டபிரிவுகளின் கீழ் புகார் செய்யலாம்?
சட்டபிரிவு 4: முதல் அறிக்கை 
சட்டபிரிவு 6: கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:
சட்டபிரிவு 11: விசாரணைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உறுதி
சட்டபிரிவு 18: நீதிமன்றத்திற்கு பரிந்துரை
சட்டபிரிவு 28A: இழப்பீட்டை மறுமதிப்பீடு செய்தல்

யாரிடம்/எப்போது புகார் செய்யலாம்?
மாவட்ட ஆட்சியரின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தியடையாவிட்டால், நீதிமன்றத்திற்கு வழக்கை பரிந்துரை செய்யுமாறு அவர்கள் மாவட்ட ஆசியரை கோரலாம்.

வழக்கை எவ்வாறு பதிவு செய்வது?
சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை அடிப்படையில், ஆட்சியர் வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பர். இதற்கு நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த தேவையில்லை. இழப்பீட்டை அதிகரித்தோ, அளவீடு மற்றும் பாகபடுதுத்தல் தொடர்பான ஆட்சியரின் உறுதியை மாற்றியோ நீதிமன்றம் தீர்ப்பளிகலாம். என்னினும் இழப்பீட்டு அளவை நீதிமன்றம் குறைக்க முடியாது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
இழப்பீட்டு தொகையை அதிகரித்து நீதிமன்றம் ஆணையிட்டால் மறுமதிப்பீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்டவர் ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்பளித்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

மாற்று வழிமுறைகள்:
இந்த சட்டத்தின் கீழ் மாற்று வழிமுறைகள் இல்லை என்று இருந்தது.

ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது தொடர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 27.8.13-ந்தேதி ஒப்புதல் வழங்கி விட்டார். மசோதா பற்றியும், இது பற்றிய தகவல்கள் என்ன என்பதையும் அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நன்றியுடன்
 - P.இராஜா
மின்னஞ்சலில் பதிவுகளை பெற
*உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*

Post Comment

4 உரமிடுபவர்கள்:

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு
அருமையாக விரிவாக
அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக
தலைப்பிட்டு சுருக்கமாய்
பதிவு செய்திருந்தது அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Unknown said...

what is the meaning of 'land ceiling' please describe me

Unknown said...

நல்ல பனி. வாழ்த்துக்கள்.

Unknown said...

பயனுள்ள தகவல்
அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக
தலைப்பிட்டு சுருக்கமாய்
பதிவு செய்திருந்தமை சிறப்பு. வாழ்த்துக்கள்.

  © www.uzhavan.com 2013

Back to TOP