இந்தியாவின் பருவமழையை அச்சுறுத்தும் ‘Super El Niño’!! வரலாறு காணாத வெப்பம் ஏற்படுமா?
Monday, 25 May 2026
சில வாரங்களுக்கு முன்பு, இந்தியப் பிரதமர் ஒரு மேடையில் நின்று 140 கோடி மக்களிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். குறைவாக வாகனம் ஓட்டுங்கள், குறைவாகப் பயணம் செய்யுங்கள், தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள் என்று கூறினார். இப்போது அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அந்தப் பேச்சு வெறும் எண்ணெய், தங்கம் பற்றியது மட்டுமல்ல. பசிபிக் பெருங்கடலில் மற்றொரு நெருக்கடி உருவாகி வருகிறது, விஞ்ஞானிகள் இதை ‘Super El Niño’ சூப்பர் எல் நினோ என்று அழைக்கிறார்கள்.
இதை ஆபத்தானது என்றும் கூறுகிறார்கள் ஏனென்றால் கடைசியாக இது போன்ற நிகழ்வு நடந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பருவமழை பொய்த்துப் போனது, பயிர்கள் நாசமாயின, பெரும் பஞ்சத்திற்கும் பங்களித்தது. இந்தியா ஏற்கனவே ஒரு எண்ணெய் நெருக்கடியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நெருக்கடி இந்தியாவைத் தாக்குகிறது. ‘Super El Niño’ இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது? அது ஏன் பயிர்ச் சேதங்களையும் உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது? என்று இந்த பதிவில் பார்ப்போம்.கோடை காலம், குளிர் காலம் போன்று ‘El Niño’ எல் நினோவும் ஒரு இயற்கை காலநிலை மாற்றமாகும். கடலின் மேற்பரப்பு வெப்பம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால் ‘El Niño’ எல்-நினோ ஏற்படும் என்கிறார்கள். எல் நினோ நிகழ்வுகள் சாதாரணமாக 2 முதல் 7ஆண்டுகளுக்கு ஒருமுறை இது மாறிக்கொண்டே இருக்கும் என்று காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் காலநிலை மிகவும் மாறுபட்டது. இது நிலம் மற்றும் நீரின் வெப்பப் பண்புகளால் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, இந்தியாவில் நான்கு முக்கிய பருவங்கள் நிலவுகின்றன:-
குளிர்காலம் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): தெளிவான வானம், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் காணப்படும்.
கோடை காலம் (மார்ச் முதல் மே வரை): நாடெங்கும் அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட வானிலை நிலவும்.
தென்மேற்கு பருவமழை / மழைக்காலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை): இந்தியாவின் முக்கிய மழைப்பொழிவு காலம்.
வடகிழக்கு பருவமழை / பருவமழை பின்வாங்கும் காலம் (அக்டோபர் முதல் நவம்பர் வரை): நிலப்பகுதியிலிருந்து கடல் நோக்கி காற்று வீசும்.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், ‘El Niño’ எனப்படும் குறைவான மழைப்பொழிவைக் குறிக்கும் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என்று ‘World Meteorological Organization’ கணித்துள்ளது. இந்த மாற்றம், பருவமழையின் இரண்டாம் பாதியான ஜூன்-செப்டம்பர் மாதங்களில் உருவாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவின் பருவமழையில் சூப்பர் எல் நினோவின் தாக்கம்!
இந்தியா தனது விவசாயத்திற்கும் நீர் விநியோகத்திற்கும் தென்மேற்குப் பருவமழையை பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, அதில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் கடுமையான சவால்களை உருவாக்குகிறது.
இதன் விளைவாக, ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு ஏற்படும் என்றும் மறுபுறம், இது பெரும்பாலும் வடகிழக்குப் பருவமழையின் போது மழைப்பொழிவை அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது முக்கியமாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களைப் பாதிக்கிறது.
மேலும், ஒரு சூப்பர் எல் நினோ மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் பல பகுதிகளில் பரவலான வறட்சியை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறார்கள். கூடுதலாக, விவசாயிகள், உணவு உற்பத்தி மற்றும் நீர்த்தேக்கங்கள் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும். இதன் விளைவாக, இது ‘Food Inflation’ உணவுப் பணவீக்கம், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கக்கூடும்.
எல் நினோ பாதிப்புகள் (History of Super ‘El Niño’ effects):-
1982-1983 ஆண்டுகளில் அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட பெரும் வறட்சி, காட்டுத்தீ மற்றும் பெருவில் கனமழை உட்பட பரவலான பேரழிவை ஏற்படுத்தியது.
1997-1998
காலப்பகுதியில் இந்தோனேசியாவில் பெரும் காட்டுத்தீ, பெருவில் கடுமையான
வெள்ளப்பெருக்கு மற்றும் உலகெங்கிலும் தீவிர வானிலை ஏற்படுத்தியதாக
அங்கீகரிக்கப்பட்டது.
2014-2015
காலப்பகுதியில் மழை குறைவாக காணப்பட்டாலும் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டது.
இதன் காரணமாக கால்நடைகள் இறப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு, நீர்த்தேக்கம்
வற்றல், குடிநீர் தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டது.
2015-2016
காலப்பகுதியில் உலக வெப்பநிலை திடீரென உயர்ந்த ஒரு சாதனை ஆண்டாக இது
அமைந்தது.கடுமையான வெப்ப அலைகள் மற்றும் வறட்சியை ஏற்படுத்தியது.
கடந்த அரை நூற்றாண்டில் பெரும் வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ என்பனவற்றை ஏற்படுத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சூப்பர் எல் நினோவின் பொருளாதாரத் தாக்கங்கள் என்னென்ன?
சூப்பர் எல் நினோ விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் நீர் வளங்களைப் பாதிக்கிறது. எனவே, இது உணவுப் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கக்கூடும்.
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா அதிக வறட்சி அபாயத்தை எதிர்கொள்கின்றன. மேலும், வடகிழக்கு இந்தியாவில் சீரற்ற மழைப்பொழிவு ஏற்படக்கூடும், அதே வேளையில் வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு இருக்கலாம்.
சூப்பர் எல் நினோ இந்தியாவில் அடிக்கடி பரவலான வறட்சி நிலைகளை ஏற்படுத்துகிறது. மேலும், இது வெப்ப அலைகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
சூப்பர் எல் நினோ இந்தியாவில் தென்மேற்குப் பருவமழையை பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக, நாட்டில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு ஏற்படுகிறது, இது விவசாயத்தையும் நீர் விநியோகத்தையும் பாதிக்கிறது.
வலுவிழந்து வரும் பருவமழை மற்றும் உரத் தட்டுப்பாடு ஒவ்வொரு காரணியும் மற்றொன்றை மேலும் மோசமாக்குகிறது.
இந்தியாவின் விவசாயிகள் பருவமழையை நம்பியுள்ளனர். இந்த ஆண்டு பருவமழை குறைவாகப் பெய்தால், ‘Food Inflation’ உணவுப் பணவீக்கம் ஏற்படும். உண்மையான கேள்வி, நிலைமை மோசமாகுமா என்பதுதான்?
பலவீனமான பருவமழை ‘Weak monsoon’ மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி ‘Strait of Hormuz crisis’ ஆகியவை 2026-ல் இந்தியாவின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக்கூடும்.
0 உரமிடுபவர்கள்:
Post a Comment